சினிமா பட பாணியில் இருசக்கர வாக னத்தில் சென்றவரிடம் ரூ 2.5 லட்சம் பணம் பறிப்பு உடன் சென்ற நண்பனே சதிதிட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஜூலை, 2025

சினிமா பட பாணியில் இருசக்கர வாக னத்தில் சென்றவரிடம் ரூ 2.5 லட்சம் பணம் பறிப்பு உடன் சென்ற நண்பனே சதிதிட்டம்!

சினிமா பாணியில் இருசக்கரவாகனத் தில்சென்றவரிடம்  ரூ  2 . 5 லட்சம் பணம் பறிப்பு உடன் சென்ற நண்பனே சதி
திட்டம்!
குடியாத்தம் , ஜூலை 26 -  

 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆம்பூர் பகுதி சேர்ந்த முத்தியார் அகமத் இவர் ஆந்திர மாநிலம் சித்தூரில் பிரியாணி கடை வைப்பதற்காக வாடகைக்கு கடை பார்க்க சென்றுள்ளார் அப்போது ரூபாய்  2 .5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த
நூர்தின் (வயது 31)என்பவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுஉள்ளார்
இதைஅடுத்துமறுநாள் சித்தூரில்இருந்து ஊருக்கு இருவரும் டூவீலரில் திரும்பி வந்துள்ளனர் அப்போது முக்தியார்
அகமத் ரூபாய் 2, 50,000 பணத்தை பை யில் போட்டு நூர்தினிடம் கொடுத்துள் ளார் அதை அவர் கையில் வைத்துக் கொண்டு பின்னால் அமர்ந்து உள்ளார் முத்தியார் டூவீலர் ஓட்டி வந்துள்ளார்
தமிழக ஆந்திரா எல்லையான பரதராமி சோதனை சாவடி அருகே வந்து கொண்டி ருக்கும் போது பின்னால் டூவீலர் வந்த இரண்டு நபர்கள் நூர்தின் வைத்திருந்த பணப்பையை பிடுங்கிக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்ற னர் இதைக் குறித்து முக்தியார் பரதராமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் அடிப்படையில் போலீசார் விசார ணை மேற்கொண்டனர் போலீசார் சந்தே கத்தின் பேரில்  நூர்திண் இடம்  விசார ணை செய்யும் போது அவர் முன்னுக்குப் பின்னுக்கும் முரணாக பதில் அளித்த தால் போலீசார் அவரிடம் தீவிர விசார ணை நடத்தினார்கள் விசாரணையில் நூறுதீன் அவரது அண்ணன் முகமது பாஷாவிடம் டூவீலரில் பணம் எடுத்து வருவதாகவும் அந்தப் பணத்தை பறிக்க அவருக்கு திட்டம் தீட்டியதும் தெரிய வந் தது இதற்காக முகமது பாஷா அவரது நண்பரான ராமமூர்த்தி இடம் பணத்தை கொள்ளை அடிக்க உதவி நாடி உள்ளார் அதற்காக ராமமூர்த்தி நண்பர்கள் இர ண்டு பேரையும் டூவீலரில் அனுப்பி நூர்த னிடம் இருந்த பணப்பையை பறித்து சென்றது தெரிய வந்தது முக்தியார் அகமது கொடுத்த புகாரின் பேரில் இதற்க்கு உடந்தையாக இருந்த  முகமது பாஷா மற்றும் ராமமூர்த்தி பணத்தை பறித்து சென்ற பேரரசு மற்றும் ஒருவர் என்ன ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நூர்தினை கைது செய்தனர் மற்ற நான்கு நபர்கள் தலைமறைவாக உள்ள னர் இவர்களை போலீசார் தேடி வருகின் றனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad