நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு”உறுப்பினர் சேர்க் கை தீவிரம்!! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 26 ஜூலை, 2025

நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு”உறுப்பினர் சேர்க் கை தீவிரம்!!

நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு”உறுப்பினர் சேர்க்கை தீவிரம்!!
ராணிப்பேட்டை , ஜுலை 26 -

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஓரணி யில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சி த்து வரும் ஒன்றிய அரசுக்கு எதிராக தமி ழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஓரணியில் திரள வேண்டும் என்று, “ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பை அறிவித்து, கிராமம் முதல் நகரங்கள் வரை அனைத்து வீடு களுக்கும் நேரடியாக சென்று மக்களை சந்தித்து, அரசின் நலத்திட்டங்களையும் எடுத்துக் கூறி, அவர்களை ஓரணியில் திரட்ட வேண்டுமென்று கட்சி நிர்வாகி களுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப் படையில், நெமிலி கிழக்கு ஒன்றியதிமுக சார்பில் சித்தேரி கிராமத்தில் இத்திட்டத் தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடை பெற்றது. 
இதில் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், நெமிலி ஒன்றிய பெருந் தலைவருமான வடிவேலு அவர்கள் கல ந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்தினார். நெமிலி கிழக்கு ஒன்றியத்தில் மொத்தம் 49 கிளை கழக ங்கள் உள்ளன. இவற்றில் 27,541 வாக்கா ளர்கள் உள்ளனர். இதில் 40 சதவீத வாக் காளர்கள், அதாவது 13800 வாக்காளர் களை இந்த முன்னெடுப்பின் மூலம் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என தலைமைக் கழகம் அறிவுறுத்தியது அதன்படி நெமிலி கிழக்கு ஒன்றியத்தில் இதுவரை 50% சதவீதத்தையும் கடந்து உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகி றது. சித்தேரி கிராமத்தில் நடைபெற்ற உறுப்பினர்கள் சேர்க்கையின் போது, கழக நிர்வாகிகள், புருஷோத்தமன் சின்னப்பா, செந்தில், குருநாதன், குப்பு சாமி, கபாலி, ஜெகதீசன், கோமதி உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad