கோவை சின்னியம்பாளையத்தில் ஆம்னி பஸ் கட்டுப்பாடு இழந்து பல வாகனங்களில் மோதி விபத்து!
கோவை காந்திபுரம் ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து இரவு பெரம்பலூருக்கு பணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது அவிநாசி சாலையில் சின்னம்பாளையம் என்ற இடத்தில் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்த பொழுதுதிடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அடுத்தடுத்து வாகனங்களின் மீது பயங்கரமாக மோதியது இரண்டு கார்கள், ஒரு லாரி, மற்றும் நான்கு, இரண்டு சக்கரவாகனங்கள் மீதுஅடுத்தடுத்து ஆம்னி பேருந்து மோதியது.இதில் சுந்தர்ராஜன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் வாகனங்களில் வந்த 6 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர் .பேருந்து மோதியதில் கார்கள் பலத்த சேதம் அடைந்தன நிலையிலும், மேலும் அப்பகுதியில் கார்களில் சிக்கியிருந்த. நபர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதளச் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக