மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம், பூம்புகார் தொகுதிக்குட்பட்ட தேரிழந்தூர், ஆனைக்குளம் பகுதியில் வசிக்கும் மக்கள் மசோதா கட்சியின் உறுப்பினர் திரு. பிரகாஷ் அவர்களின் மகன் கௌதம், மேற்படிக்காக கல்விக் கட்டணம் செலுத்த வேண்டி கட்சியின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் மாயா வெங்கடேசன் அவர்களிடம் உதவி கோரிய மனுவை சமர்ப்பித்திருந்தார்.
மனுவினை ஆராய்ந்த தலைமையிடம், கௌதத்தின் கல்வி நலனை கருத்தில் கொண்டு தேவையான கல்வி உதவித்தொகை நேரில் வழங்கப்பட்டது. மாணவனின் எதிர்கால கல்வி முன்னேற்றத்திற்கு இது பெரும் ஊக்கமாக அமைந்தது. இந்த நிகழ்வில் மக்கள் மசோதா கட்சியின் பொதுச் செயலாளர் ஆர்.கே.வி. ரூபன், மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், பாகசாலை மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஆறுபாதி ஏ. எஸ். சபரிநாத், மயிலாடுதுறை மாவட்ட பொருளாளர் முரளி மூர்த்தி, குத்தாலம் ஒன்றிய செயலாளர் சோலை செல்வா, செம்பனார்கோவில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பகத்சிங், திருச்சம்பள்ளி ஊராட்சி செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு மாணவனை உற்சாகப்படுத்தினர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக