ஶ்ரீகேதாரகெளரி அம்மன் கோவிலில் QR CODE SCAN மூலம் காணிக்கை செலுத்த கோயில் நிர்வாகம் அறிவிப்பு !
பேர்ணாம்பட்டு ,நவ 15 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே
ஶ்ரீகேதாரகெளரி அம்மன் கோவிலில் QR CODE SCAN மூலம் காணிக்கை செலுத்த கோயில் நிர்வாகம் அறிவிப்பு- பக்தர்கள் ஆர்வமாக ஸ்கேன் செய்து காணிக்கை செலுத்தி வருகின்றனர் வேலூர் மாவட் டம் பேரணாம்பட்டு அடுத்த சொக்கரிஷி குப்பம் பகுதியில் 300கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இந்த பகுதியில் ஸ்ரீ கேதார கௌரி அம்மன் கோயில் உள்ளது இந்த ஆலயத்தில் உகாதி பண்டிகை ஆயுதபூஜை தீபாவளி பொங்கல் மயிலார் உள்ளிட்ட விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம்இந்த நிலையில் இந்த இந்த கோயிலில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்த பின் கோயிலில் காணிக்கை செலுத்தி வந்த நிலையில் அந்தக் காணிக்கை என்னும் போது பல முறைகேடுகள் நடைபெற்று வந்தது இதனை தடுக்கும் விதத்தில் அந்த கோவிலில் ஊர் பெரியவர்கள் ஒன்றிணைந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் QR CODEஐ ஸ்கேன் மூலம் காணிக்கைகளை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலா ளர்கள் அஸ்வதி, சுரபி, மணிகண்டன், கோயில் அறங்காவல் குழு செயலாளர் சிவண்ணா அறங்காவல் குழு தலைவர் நாமதேவன் அறங்காவலர் குழு பொரு ளாளர் ராஜேஷ் மற்றும் கோபி வேலா யுதம் ஜெயராமன் உள்ளிட்ட ஊர் பெரியவர்கள் கலந்து கொண்டனர் மேலும் இந்த கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் QRCODE SCAN மூலம் உங்களது காணிக்கைகளை ஆர்வமுடன் செலுத் தினர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக