நாட்றம்பள்ளி பகுதியில் பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம் !
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியில், பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசு நலத் திட்டங்கள் பிரிவு சார்பில், வேலூர் பெருங்கோட்டம் மத்திய அரசு நலத் திட்டங்கள் பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை மாநில தலைவர் ராஜா, மத்திய அரசு செயல் படுத்தி வரும் பல நலத்திட்டங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார்.
பின்பு மாநில செயலாளர் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த குருசேவ் கூட்டத் துக்கு தலைமை வகித்தார்.மேலும் நிகழ் வில்,திருவண்ணாமலை மாவட்ட வடக்கு மாநில செயலாளர் ஆரணி சைதை சங்கர் மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி மாநில இணை அமைப் பாளர் லோகேந்திரன் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் தண்டாயுதபாணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித் தனர் 29ஆம் தேதி மாநாடு நடைபெறும் என்பதால் அது குறித்து ஆலோசனையும் வழங்கினார்கள மேலும் இந்த அறிமுக நிகழ்ச்சியில் ஏராளமான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக