பைக் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது... இருசக்கர வாகனம் பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 19 டிசம்பர், 2025

பைக் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது... இருசக்கர வாகனம் பறிமுதல்.

பைக் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது... இருசக்கர வாகனம் பறிமுதல்.

கன்னியாகுமரி மாவட்டம் கம்பிளார், தேவாண்டிவிளை பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை மார்த்தாண்டம் PPK மருத்துவமனை அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடு போய்விட்டதாக புகார் அளித்திருந்தார். 

இந்த புகார் சம்பந்தமாக உடனடியாக குற்றவாளியை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
உத்தரவின்படி, மார்த்தாண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர். நல்லசிவம் மேற்பார்வையில், ஆய்வாளர்.தமிழரசன் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையில் விசாரணை செய்யப்பட்டது. 

இந்த விசாரணையில் இந்த பைக் திருட்டில் ஈடுபட்டது உண்ணாமலைகடை, கம்மாள்விளை பகுதியை சேர்ந்த வினு குமார் என்பவரது மகன் விஷ்ணு(21) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டது. காணாமல் போன இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad