தூத்துக்குடி உள்ளூர் திட்டப் பகுதிக்கான முழுமைத்திட்டம் -2045 அரசு ஒப்புதல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 மார்ச், 2026

தூத்துக்குடி உள்ளூர் திட்டப் பகுதிக்கான முழுமைத்திட்டம் -2045 அரசு ஒப்புதல்.

தூத்துக்குடி உள்ளூர் திட்டப் பகுதிக்கான முழுமைத்திட்டம் -2045 அரசு ஒப்புதல் – மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் 34 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கிய 463.62 சதுர கி.மீ பரப்பளவில் தூத்துக்குடி உள்ளூர் திட்டப் பகுதிக்கான தூத்துக்குடி முழுமைத்திட்டம் - 2045 தயார் செய்யப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டு, தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 28-ன் கீழ் முழுமைத்திட்டமானது அரசாணை எண் 67, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை (நவ(4(2)), நாள் 04.03.2026-ன் படி அரசால் ஒப்புதலளிக்கப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 30(1)-ன் கீழ் தமிழ்நாடு சிறப்பு அரசிதழில், தமிழ்நாடு அரசிதழ் எண் 145, Part II, Section 2, பக்கம் எண் 1, நாள் 04.03.2026-ல் பிரசுரிக்கப்பட்டுள்ளது, 

மேற்படி தூத்துக்குடி முழுமைத்திட்டமானது உரிய இணைப்புகளுடன் ஆணையர், தூத்துக்குடி மாநகராட்சி, பாளையங்கோட்டை மெயின்ரோடு, தூத்துக்குடி அலுவலகத்திலும், தூத்துக்குடி உள்ளுர் திட்டக் குழுமம் / மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரபம்பள்ளம், தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்திலும் 

அலுவலக வேலை நாட்களிலும், https://thoothukudilpa.com என்ற இணையதள முகவரியிலும் பொதுமக்கள் பார்வையிடலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad