அனைத்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்வகிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விவசாயிகளின் உழவன் தேர் விழிப்புணர்வு ரதம் தஞ்சாவூரில் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி தஞ்சையில் தொடங்கியது.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இதனை தொடங்கி வைத்தார். இந்த ரதம் தஞ்சையில் இருந்து புறப்பட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி, சென்னை மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் பகுதிகளிலும் பொது மக்களிடையே விழிப்புணர்வு பயணமாக மேற்கொண்டு வருகிறது.
அந்த உழவன் ரதம் இன்று திருச்செந்தூர் வந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தும், செல்போனில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அனைத்திந்திய விவசாய சங்க தலைவர் செல்வகணேஷ் தலைமையில் அனைத்திந்திய விவசாய சங்கத்தினர் சிறப்பாக செய்துள்ளனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக