தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 மார்ச், 2026

தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம்.

தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் அவசர ஆலோசனைக்கூட்டம் 12.03.2026 வியாழன் கிழமை மதியம் 12 மணியளவில் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. 

தலைவர் ரெ.காமராசு நாடார் தலைமையில் மாநில செய்தி தொடர்பாளர் செல்வின் மற்றும் மாநில இணைச் செயலாளர்கள் இசக்கிமுத்து செல்வகுமார் முன்னிலை வகித்தனர் 

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் வேல் முருகன் மாவட்ட துணை தலைவர் சங்கர் மாவட்ட இளைஞரின் துணைச் செயலாளர் கோடீஸ்வரன் முனியாண்டி மற்றும் நிர்வாகிகள் பாலமுருகன் அழகேசன் தங்ககுமார், பால்வண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு எடுத்தனர்.

1. ஈரான், இஸ்ரவேல், அமெரிக்க போர் காரணமாக வணிக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகமாக தமிழகத்தில் உள்ளது. மத்திய அரசு போர்கால அடிப்படையில் அனைத்து மாநில முதலமைச்சர்களை அழைத்துப் பேசி, வணிக சிலிண்டர் பதுக்கலை தடுத்து விநியோகத்தை சீராக்கி, 

வணிகர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அரசு நடவடிக்கை எடுத்தால் தான் லட்சக்கனக்கான ஹோட்டல் முடுவதை தடுக்க முடியும். சுற்றுலா தலங்கள், வழிப்பாடு நகரங்கள் சீராக இயங்க முடியும், பொருளாதார நெருக்கடியை தவிர்க்க முடியும் மத்திய மாநில அரசுகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு வணிகர் சங்கம் கேட்டுக் கொள்கின்றது.

2. தமிழ்நாடு மாநில தேர்தல் 2026 விரைவில் அறிவிக்க இருப்பதால் பறக்கும் படை வாகன சோதனையால் அதிகமாக பாதிப்பு ஏற்படுவது வணிகர்களுக்குதான் தேர்தல் தேதி அறிவிக்கும் முன் தேர்தல் பறக்கும் படை தனது பணம் தேடுதல் வேட்டையை தொடங்கிவிட்டது. இதனால் வணிகர்கள் மிகவும் அச்சத்துடன் இருக்கின்றனர். 

வணிகர்கள் அச்சத்தை போக்கும் விதமாக அரசு பெரும் வணிகர்களுக்கு 5 லட்சம் வரையும் சிறு குறு வணிகர்களுக்கு 2 லட்சம் வரையும் பொருள்கள் கொள்முதல் செய்வதற்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம்.

3. திருச்செந்தூர் போன்ற வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் அனைவரும் ஹோட்டல் போன்ற உணவு விடுதிகளை நம்பியே வழிபட வருகின்றனர் அவர்களுக்கு உணவு வாங்க ஹோட்டல் மூடாமல் இருக்க, வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் தங்கு தடையின்றி கிடைக்க அரசு உடனடியாக போர்கால நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு வணிகர் சங்கம் அரசை வலியுறுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad