திருப்புளிங்குடி கோவிலில் கொடியேற்றம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 மார்ச், 2026

திருப்புளிங்குடி கோவிலில் கொடியேற்றம்.

திருப்புளிங்குடி கோவிலில் கொடியேற்றம். 

ஸ்ரீவைகுண்டம், மார்ச் 12. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் மூன்றாவது ஆன திருப்புளிங்குடி காய்சினி வேந்தப் பெருமாள் கோவிலில் இன்று பங்குனி உற்சவம் கொடியேற்றம் நடந்தது. 

காலை 5 மணிக்கு விஸ்வரூபம். 7 மணிக்கு நித்தியல். 9 மணிக்கு கொடிப் பட்டம் மாடவீதி சுற்றி வந்தது. கொடி பூஜை செய்து 9.45 மணிக்கு அர்ச்சகர் ரமேஷ் கொடி ஏற்றினார். தினசரி காலை மாடவீதி புறப்பாடு மாலை 6.30 மணிக்கு இந்திய விமானம். அனுமார். சிங்கம். சேஷ வாகனங்களில் மாடவீதி ரதவீதி புறப்பாடு நடைபெறுகிறது. 

மார்ச் 16, 5 ம் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் நத்தம் எம்இடர்கடிவான் எழுந்தருளி இரவு மூன்று பெருமாள்களும் கருடவாகத்தில் காட்சி அளிப்பார்கள். 

 மார்ச் 20 ந்தேதி தெப்பம்.21 ந்தேதி தீர்த்தவாரி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் கோபாலகிருஷ்ணன். சௌந்திரராஜன் ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். கண்ணன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன். 

ஆய்வாளர் நிஷாந்தினி. அறங்காவலர் குழு தலைவர் அருணா தேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம் பேக்கிரி முருகன் முத்துகிருஷ்ணன் பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad