நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மைய திறப்பு விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 12 மார்ச், 2026

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மைய திறப்பு விழா.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மைய திறப்பு விழா.

 நாசரேத், மார்ச் 11. நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில், பாரத ஸ்டேட் வங்கியின் சார்பில், 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ள மாதிரி அறிவியல் மையத் திறப்பு விழா நடைபெற்றது. 

தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். ஆங்கில ஆசிரியர் ஸ்டீபன் பிரேம்குமார் ஆரம்ப ஜெபம் செய்தார்.பாரத ஸ்டேட் வங்கியின் தூத்துக்குடி மண்டல மேலாளர் ஆல்வின் மார்ட்டின் ஜோசப், மாதிரி அறிவியல் மையத்தினை திறந்து வைத்தார். மாதிரி அறிவியல் மையத்தில், முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் உபகரணங்கள், செயல்பாட்டு கருவிகள், இயற்பியல், வேதியியல் கணிதம் மற்றும் பொறியியல் சார்ந்த மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

சிறப்பு விருந்தினர்களாக பாரத ஸ்டேட் வங்கியின் சமூக பொறுப்பு செயல்பாட்டு தலைமை மேலாளர் அகில்குமார், பாரத ஸ்டேட் வங்கி நாசரேத் கிளை மேலாளர் சண்முகசுந்தரம், நிதி அறிவுசார் ஆலோசகர் மணிகண்ட வாசகன், தூத்துக்குடி மண்டல அலுவலகத்தின் அலுவலர்கள் பெஞ்சமின் மற்றும் ஜேம்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாரத ஸ்டேட் வங்கிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்து தருவதற்கும் கோரிக்கை வைக்கப்பட்டது. 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் சுதாகர் தலைமையில், கணினி ஆசிரியர் பொன்தாஸ்,பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad