வாணியம்பாடி அருகே தனியார் காலணி தொழிற்சாலை வாகனம் விபத்தில் சிக்கி 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் !
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியார் காலணி தொழிற்சாலை வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய தேசிய நெடுஞ்சாலை தடுப்பு மீது மோதிய விபத்தில் 15 க்கும் மேற் பட் டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவ மனையில் சிகிச்சை திருப்பத்தூர் மாவட் டம் ஆம்பூர் அடுத்த சோலார் பாதியில் இயங்கி வரும் தனியார் காலணிதொழிற் சாலையில் பணியாற்றி வரும் தொழிலா ளர்கள் பணி முடிந்து வேன் மூலமாக வாணியம்பாடி நோக்கி (09.03.26) சென்று கொண்டிருந்தனர். அப்போது வேன் வாணியம்பாடி அடுத்த வளையம்பட்டு பகுதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது முன்னாள் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது லேசாக மோதி பின்னர் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை நடுவில் உள்ள தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த அஜீத் குமார் மற்றும் அவரது மனைவி லாவண் யா சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர். மேலும் வேனில் பயணம் செய்த பெண் தொழி லாளர்கள் 15-க்கும் மேற்பட்டோர் படுகா யம் அடைந்தனர். இதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த வர்களை பொது மக்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே அவர்களு க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலத்த காயம் அடைந்த மீனா மற்றும் நசீரா பேகம் ஆகி யோர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக் கப்பட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற கிராமிய போலீ சார் விபத்துக்குள்ளான வேனை சாலை ஓரத்தில் அப்புறப்படுத்தி போக்குவரத்து சீர் செய்தனர். தகவலின் பேரில் வாணி யம்பாடி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந் தில் குமார், வட்டாட்சியர் சுதாகர் ஆகி யோர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர். மேலும் மருத்துவர் களுக்கு உரிய சிகிச்சை அளிக்க கேட்டுக் கொண்டனர்.சம்பவம் குறித்து கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக