ஸ்ரீவைகுண்டம், மார்ச் 12, தமிழ் நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்க மாதாந்திர கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் வெங்கடாச்சாரி தலைமை தாங்கினார். சங்கையா இறைவணக்கம் பாடினார்.
ஆறுமுகம் தமிழ்தாய் வாழ்த்துப் பாடினார். ஸ்ரீவைகுண்டம் மண்ணின் மைந்தர் நல்லகண்ணு இறப்பிற்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
கூட்டத்தில் மருத்துவ காப்பீடு. குடும்ப ஓய்வூதியம் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதி பெறுவதற்கான புதிய நடைமுறை பற்றி தலைவர் வெங்கடாச்சாரி விளக்கமாக உரையாற்றினார்.
செயலாளர் மாடசாமி சொர்ணம் சென்ற கூட்ட அறிக்கைகளையும் பொருளாளர் சீனிப்பாண்டி வரவு செலவு கணக்கு வாசித்தனர். இந்நிகழ்ச்சியில் ராஜதேவமித்ரன்.இசக்கிமுத்து. மகாலிங்கம். கரையாளன்.
சம்பந்தன். ராமசாமி. ஈஸ்வரமூர்த்தி. முத்தையா. சீதாராமன். மருதையா. பரமசிவன். டோம்னிக் ஆகியோர் கலந்து கொண்டனர், தேசிய கீதத்துடன் கூட்டம் முடிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக