இலவச பொது மருத்துவ முகாம்
மார்ச் 4- தூத்துக்குடி முள்ளக்காடு ஊராட்சி அலுவலக வளாகத்தில் தூத்துக்குடி ஆல்கலி கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர் மற்றும் ஏஎம் பவுண்டேசன் இணைந்து நடத்திய பொதுமக்களுக்கான இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாமை டி எஃப்எல் நிறுவனத்தின் ஏஜிஎம் அசோக்குமார் துவக்கி வைத்தார்.
இதை தொடர்ந்து இந்த முகாமில் ஏஎம் பவுண்டேஷன் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு விரிவான மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர்.
இரத்த அழுத்தம் அளவு உள்ளிட்ட முக்கிய உடல் நிலைகள் பரிசோதிக்கப்பட்டு, முதற்கட்ட சிகிச்சையும் இலவச மருந்துகளும் வழங்கப்பட்டன. மேலும், பொதுமக்களிடம் உடல்நல பராமரிப்பு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இம்முகாமின் மூலம் பயனடைந்தனர்.
தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக