குன்றுமலை சாஸ்தா கோயிலில் மாசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை - அன்னதானம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 மார்ச், 2026

குன்றுமலை சாஸ்தா கோயிலில் மாசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை - அன்னதானம்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுடன். இணைந்த குன்றுமலை சாஸ்தா கோயிலில் மாசி மாத பௌர்ணமி சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம், அன்னதானம்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் கீழ நாலு மூலைகிணறு கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுடன் இணைந்த குன்று மலை சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மாத பௌர்ணமி பூஜை இன்று நடைபெற்றது. 

இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான குன்று மலை சாஸ்தா பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து அருள்மிகு குன்று மேல்லய்யன் சாஸ்தா கோவில் அன்னதான மண்டபத்தில் சேவா சங்கத்தினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

இதற்கான ஏற்பாடுகளை சேவா சங்கத்தினர் சிறப்பாக செய்தனர். மேலும் இன்று சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 2 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. 

புதன்கிழமை காலை 9 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு பரிகார பூஜைக்கு பின் வழக்கம் போல் சுவாமிக்கு பூஜை நடைபெறும்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad