திருச்செந்தூரில் ஸ்ரீசரவணய்யர் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியின் முன்னாள் செயலர் இரா.சரவணனின் 19வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி பள்ளியில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்வில் பள்ளி செயலர் ச.ராமச்சந்திரன், தலைமையாசிரியை ந.குணசுந்தரி, இந்து துவக்க பள்ளி செயலர் சு.ராஜமாதங்கன், ஆசிரியர்கள் த.ஜார்ஜ் ராஜ்,க.சாந்தி, லெ.தெய்வானை, அந்தோணி சேவியர் ராஜ் ஆகியோர் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து முன்னாள் செயலாளர் சரவணனின் நினைவுகள் குறித்து பேசினர். இதில் ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவ, மாணவிகள் சிவபுராணம் பாடினர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக