திருவண்ணாமலை குப்பநத்தம் அணை யில் இருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு !
திருவண்ணாமலை , மார்ச் 3 -
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குப்பநத்தம் அணையில் இருந்து விவசாயிகள் பயன் பெறும் வகையில் விவசாய பாசனத்திற்காக 03/03/26/முதல் 31/03/26 வரை வினாடிக்கு 240 கன அடி வீதம் 28 நாட்களுக்கு ஒரே தவணையாக 580.80 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணை அறிவிக்கப் பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சி யர் க.தர்பகராஜ் அவர்கள் குப்பநத்தம் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இதனால் 47 ஏரிகள் நிரம்பி சுமார் 9432.76 ஏக்கர் ஆயக்கட்டு நிலங் கள் பயன் பெறும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட செய்தியாளர் -T.R.கலையரசு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக