சிறுமியிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 4 ஜூலை, 2026

சிறுமியிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் !

சிறுமியிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் !
பேர்ணாம்பட்டு , ஜூலை 4 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதி யில் ஏழு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கட்டிட தொழிலாளி யை பொதுமக்கள் தாக்கியதில் காயம்- அரசு மருத்துவமனையில் சிகிச்சை- பேரணாம்பட்டு போலீசார் விசாரணை 
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியைச் சேர்ந்த வெங்க டேசன் (வயது 36) இவர் கட்டிட மேஸ்திரி ஆக வேலை செய்து வருகிறார் இதனி டையே இன்று மாலை பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி  மேடு பகுதியில் வீட்டின்  அருகே விளையாடிக் கொண்டி ருந்த ஏழு வயது சிறுமியிடம் வெங்கடே சன் பாலியலில் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி வெங்கடேசனை பிடித்து சரமாரியாக தாக்கியதில் வெங்க டேசன் படுகாயம் அடைந்தார்உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பேரணாம்பட்டு போலீசார் வெங்க டேசனை மீட்டு சிகிச்சைக்காக பேரணாம் பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி க்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப் பட்ட நிலையில மேலும் இந்த சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் (7 வயது) சிறுமியிடம் பாலியல் சீண்ட லில் ஈடுபட்டவரை பொதுமக்கள் பிடித்து தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப் பை ஏற்படுத்தி உள்ளதுமேலும் தற்போது பேரணாம்பட்டு போலீசார் வெங்கடேசன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad