விபத்தில்லா கன்னியாகுமரியை உருவாக்கும் என்ற உயரிய இலக்கை நோக்கி, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஸ்டாலின், தலைமையில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பில் இதுவரை 550 தன்னார்வலர்கள் இணைந்துள்ளார்கள். இவர்கள் காவல்துறையினருடன் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர்.
தன்னார்வலர்களின் முக்கிய பணிகள்:
இரவு நேரங்களில் தெளிவாக தெரியாத பேரிகேட்கள், டிவைடர்கள் போன்ற இடங்களில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் தேவைப்படும் பகுதிகளை கண்டறிந்து தகவல் வழங்குதல்.
புதிய வேகத்தடைகள் அமைக்க வேண்டிய பகுதிகளை பரிந்துரைத்தல்.
நடைபாதை ஆக்கிரமிப்புகள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விளம்பரப் பதாகைகள் மற்றும் தவறாக நிறுத்தப்படும் வாகனங்கள் குறித்து தகவல் தெரிவித்து நடவடிக்கைக்கு உதவுதல்.
அதிக வேகத்தில் செல்லும் வாகனங்கள் மற்றும் சாலை பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். இணைக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்து, உடனடி நடவடிக்கைக்கு வழிவகை செய்தல்.
தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட நிருபர்.நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக