கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வரும் நாகர்கோவில் நிமிர் குழுவினர், மனநலம் பாதிக்கப்பட்ட சுமார் 58 வயது மதிப்பதற்கு பெண்மணிக்கு மனிதநேய உதவி செய்துள்ளனர்.
மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த மாலதி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தனியாக நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் சுற்றி வருவதாக தகவல் நிமிர் குழுவினருக்கு கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொண்டனர்.
பின்னர் மண நலம் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களை தொடர்பு கொண்டு வரவழைத்து அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட நபரை அழைத்து சென்ற உறவினர்கள் அவர்களை நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் அவர்களுக்கு அறிவுரைகளும் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட நிருபர்.நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக