காட்பாடியில் பரபரப்பு "வீட்ல கொண்டு போய் விடுங்க!" - அரசுப் பேருந்தை மறித்து மதுப்பிரியர் ரகளை !
வேலூர் மாவட்டம் காட்பாடியில் இருந்து பாகாயம் நோக்கி அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. காட்பாடி - சித்தூர் பேருந்து நிலையம் அருகே பேரு ந்து வந்தபோது போதையில் இருந்த மது பிரியர் திடீரெனப் பேருந்தின் குறுக்கே நின்று வழிமறித்தார்.பேருந்தை நிறுத்தி யதும் ஓட்டுனரிடம் சென்ற அந்த நபர் "பேருந்தை எனது ஊரான திருவலம் பகுதிக்கு ஓட்டிச் சென்று, என்னை என் வீட்டில் இறக்கி விட வேண்டும்" எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மதுப் பிரியரின் இந்த செயலால் என்ன செய்வ தென்று தெரியாமல் திகைத்துப் போன ஓட்டுநர்இதனைத் தொடர்ந்து பேருந்தை அங்கேயே நிறுத்தினார். இதனால் அப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டது. அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் காவல் துறையினர் ரகளையில் ஈடுபட்ட மதுப்பிரியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரைச் சமாதானப்படுத்தினர். பின்னர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி பேருந்து தொடர்ந்து செல்ல வழிவகை செய்தனர்.மதுப்பிரியரின் இந்தத் திடீர் அட்டகாசத்தால் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக