மயங்கி கிடந்த அடையாளம் தெரியாத நபர் அடுக் கம்பாறை அரசு மருத்துவ மனையில் அனுமதி காவல்துறை விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 ஆகஸ்ட், 2026

மயங்கி கிடந்த அடையாளம் தெரியாத நபர் அடுக் கம்பாறை அரசு மருத்துவ மனையில் அனுமதி காவல்துறை விசாரணை !

மயங்கி கிடந்த அடையாளம் தெரியாத நபர் அடுக் கம்பாறை அரசு மருத்துவ மனையில் அனுமதி காவல்துறை விசாரணை !
காட்பாடி , ஆகஸ்ட் 8 - 
வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலைய நுழைவாயில் அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் இன்று உடல்நலம் சரியில்லாமல் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.அதனைக் கண்ட CMC உதவி மையத்தினர் (CMC Help Desk) உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்து, அவரை மீட்டுவேலூர் அடுக்கம்பாறை அரசு பொது மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை யில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள நபர் தொடர்ந்து மயக்க நிலை யிலேயே (Unconscious) இருப்பது தெரிய வந்தது.பாதிக்கப்பட்ட நபரின் பெயர் மற்றும் முகவரி பற்றிய விவரங்கள் இதுவரை தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக காட்பாடி ரயில்வே காவல் நிலையத்தில் General Diary பதிவு செய்யப் பட்டு காவல்துறை சார்பில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad