குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடை களில் கைவிரல் ரேகை பதிவு செய்வது அவசியம் மாவட்ட ஆட்சியர் ப்ரியா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 ஆகஸ்ட், 2026

குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடை களில் கைவிரல் ரேகை பதிவு செய்வது அவசியம் மாவட்ட ஆட்சியர் ப்ரியா !

குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடை களில் கைவிரல் ரேகை பதிவு செய்வது அவசியம் மாவட்ட ஆட்சியர் ப்ரியா !
ராணிப்பேட்டை , ஆகஸட் 8 -

ராணிப்பேட்டை மாவட்டம் குடும்ப அட்டை தாரர்கள் ரேஷன் கடை களில் கைவிரல் ரேகை பதிவு செய்வது அவசியம் மாவட்ட ஆட்சியர் ப்ரியா ஆய்வு தமிழ்நாடு முழுவ தும் கூட்டுறவுச் சங்கங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் 
சுய உதவிக்குழுக்கள் மூலம் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் பொது விநி யோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப்
பொருட்கள் பெற்று வரும் குடும்ப அட்டை பயனாளிகள் அனைவரும் தங்களது குடும்ப அட்டையில் உள்ள அனைத்து 
உறுப்பினர்களின் e-KYC கைரேகை பதிவு தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகின் றன தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013 ன்படி முன்னுரிமை மற்றும் அந்தி யோ தயா அன்ன யோஜனா குடும்ப அட் டைகளின் ஆதார் விவரங்களை சரி பார்ப் பதற்காக மின்னணு குடும்ப அட்டை யில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளி களின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை eKYC மேற் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி யுள்ளது. அதன்படி குடும்ப உறுப்பினர் களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணி யினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த
அக்டோபர் 2023 முதல் குடும்பஉறுப்பினர் களின் விரல் ரேகை சரிபார்ப்பு eKYC பணி நடைபெற்று வருகிறது.உணவுப்பொருள் 
வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் அவர்களின் கடிதத்தில் 
அறிவுறுத்தியவாறு e-KYC  பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு இன்று 08.08.2026 மற்றும் நாளை 09.08.2026 ஆகிய இரண்டு நாட்கள் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. எனவே பொது மக்கள் அனைவரும் அருகில் உள்ள
நியாய விலை கடைகளுக்கு  சென்று தங்களது e-KYC பதிவினை மேற்கொள்ளு மாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ப்ரியா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad