தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 - அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி மாநிலத் தழுவிய ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 8 ஆகஸ்ட், 2026

தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 - அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி மாநிலத் தழுவிய ஆர்ப்பாட்டம் !

தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 - அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி மாநிலத் தழுவிய ஆர்ப்பாட்டம் !
வேலூர் ,ஆகஸ்ட் 8 -
        வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 - அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 8 -8- 2026 சனிக்கிழமை காலை 10:30 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியின் தலைமை P. குமரேசன் மாவட்டத் தலை வர் வரவேற்புரை P. ஞானசேகரன்மாவட்ட பொருளாளர் TNGPA கு .தருமன் மாவட்ட செயலாளர் வாழ்த்துரை வழங்கிய  M.பன்னீர்செல்வம் மாவட்ட தலைவர் TNGPA , N. பிச்சுமணி மதிப்புறு தலைவர் TNEPWO, S. பரசுராமன் மாவட்ட செயலா ளர் CITU, P. லோகநாதன் மாவட்ட செயலா ளர் COC of CS G& PS PA C. ஞானசேகரன் கன்வினர் / நகர தொழிற்சங்கங்கள்இந்த நிகழ்ச்சியின் சிறப்புரை வழங்கிய B. கிருஷ்ணமூர்த்தி மாநில துணைத் தலை வர் TNGPA கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை  ஆர்ப்பாட்டத்தில் முன்வைத்தினர்.
* 8 வது ஊதியக்குழு அமைப்பின் ஓய்வூதியர்கள் தொடர்பாக ஒரு பிரிவை இணைத்து ஓய்வூதியர் அமைப்புகள் வைத்த கோரிக்கைகளை பரிசீலித்து கடந்த காலங்களில் ஓய்வூதிய உயர்வு அளித்து வந்ததைப் போன்ற பரிந்து ரையை வழங்கிடுக !
* பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துக !
* ஓய்வூதிய மறுசீரமைப்பு என்ற பெயரில் (Revalidation) ஓய்வூதியர்களுக்கு இடை யே பிரிவினை உருவாக்கும் பாராளு மன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்திடுக !
* 70 வயது முடிந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் வழங்கிடுக !
*குடும்ப பாதிப்பு நிதியை 1.50 லட்சமாக உயர்த்தி ரூபாய் வழங்கிடுக !
*புதிய ஓய்வு திட்டத்தில் உள்ள அங்கன் வாடி சத்துணவு உள்ளிட்ட ஓய்வூதியர் களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 7850 /- வழங்கிடுக!
* ஓய்வு புதிய குடும்ப ஓய்வூதியர் மறை விற்குப் பின்னர் அவரது விதவை மகள் விவாகாரத்தான மகள் ஆகியோருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கிடுக ! ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய காலத்தை பணிக்காலமாக கணக்கிட்டு ஓய்வூதியத் தை உயர்த்தி வழங்கிடுக !
*அரசு வாரியங்கள் அறிவித்துள்ள NHIS காசில்லா மருத்துவ உத்தரவின்படி மருத் துவ சிகிச்சைக்கான முழு தொகையை மீள வழங்கிடுக !
என மாநிலம் தழுவி தமிழ்நாடு அரசு ஓய்வூதிய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற  ஓய்வூதியர்கள்  அனைவருக் கும் நன்றி தெரிவித்தனர் முடிவில் கே. ரவிச்சந்திரன் பொருளாளர் நன்றியுரை ஆற்றினார்.  

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad