திருப்பத்தூர் அருகே தண்ணீர் தொட்டி யில் தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

திருப்பத்தூர் அருகே தண்ணீர் தொட்டி யில் தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு !

திருப்பத்தூர் அருகே தண்ணீர் தொட்டி யில் தவறி விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை உயிரிழப்பு !
வாணியம்பாடி, ஆக 9 - 
திருப்பத்தூர் அருகே தண்ணீர் தொட்டி யில் தவறி விழுந்த ஒன்றரை வயதுஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த வெங்கடகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலன் – தீபா தம்பதி யினரின் ஒன்றரை வயது மகன் ஜித்து. தம்பதியினர் இருவரும் சூளகிரி பகுதி யில் வேலை செய்து வருவதால், குழந் தையை சிங்காரவேலனின் தாயார் வீட்டில் கவனித்து வந்ததாக கூறப்படு கிறது இந்த நிலையில், வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் விளை யாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர் பாராத விதமாக தவறி விழுந்துள்ளது. இதை யாரும் உடனடியாக கவனிக்காத நிலையில், சிறிது நேரம் கழித்து குழந் தையை காணாததால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
பின்னர் தண்ணீர் தொட்டியைப் பார்த்த போது, குழந்தை அதில் உயிரிழந்த நிலை யில் மிதந்து கொண்டிருந்தது தெரியவந் தது. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் குழந்தையை உடனடியாக மீட்டு திருப் பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து, பெற்றோர் மற்றும் உறவி னர்கள் மருத்துவமனையில் கதறி அழு தது காண்போரை கண்கலங்கச் செய் தது.வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த இந்த துயரச் சம்பவம், வெங்கடகவுண்டனூர் பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது.சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக குரல் ஊடகச் செய்தி நிறுவனம் இனை ஆசிரியர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad