பின்னர் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் இருந்து நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வழித்தடத்தில் மூன்று முறை பேருந்து சேவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது கூடுதலாக 2 வழித்தடத்திற்கான சேவையினை துவங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் வழித்தட எண் 71 A காலை 09.25 மணியளவில் தவசலிங்கபுரத்திலிருந்து விளாத்திகுளம் பேருந்து நிலையம் செல்லும் பேருந்து நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வழியாக சென்று வரும்.
அதேபோல 74 A வழித்தட எண் மாலை 15.50 விளாத்திகுளத்தில் இருந்து புறப்படும் பேருந்து நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வழியாக கந்தசாமிபுரம் சென்றடையும். இச்சேவை நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர்கள், பொதுமக்கள் பயன்பெறுவார்கள். சேவையினை நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என அமைச்சர் பெ.மதன்ராஜா தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருநெல்வேலி த.அ.போ.க (தூத்துக்குடி மண்டலம்) பொது மேலாளர் ராமகிருஷ்ணன், துணை மேலாளர் (வணிகம்) சண்முகம், விளாத்திகுளம் கோட்ட மேலாளர் மாடசாமி, விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன், பொதுமக்கள் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக