திருப்பூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த க.செல்வராஜ் எம் எல் ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம்!. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

திருப்பூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்த க.செல்வராஜ் எம் எல் ஏ தலைமையில் ஆலோசனை கூட்டம்!.

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது குறித்து, திருப்பூர் திமுக வடக்கு மாவட்ட அலுவலகம் முரசொலி மாறன் வளாகத்தில் திருப்பூர் வடக்கு மாநகரம், மற்றும் தெற்கு மாநகர செயற்குழு கூட்டம் திருப்பூர் வடக்கு திமுக மாவட்ட செயலாளரும், தெற்கு சட்டமன்ற உறுப்பினருமாகிய க. செல்வராஜ் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் திமுகவின் தெற்கு மாநகர செயலாளரும் தொமுச மாநில துணை செயலாளருமான டி.கே.டி.மு.நாகராசன், வடக்கு மாநகர செயலாளரும், திருப்பூர் மேயருமான ந.தினேஷ்குமார், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர்கள், சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad