குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி பயனாளிகளுக்கு வழங்கி துவக்கிவைத்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி பயனாளிகளுக்கு வழங்கி துவக்கிவைத்தார்.

புதுச்சேரி அரசின் மாதாந்திர உதவித்தொகை ஏதும் பெறாத 21 முதல் 55 வயதுக்குள் இருக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்குவதற்கான அடையாள அட்டையை  உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார், இதற்கான ஏற்பாடுகளை மகளிர் மேம்பாட்டு துறை இயக்குனர் முத்துமீனா தலைமையில் அதிகாரிகள் செய்திருந்தனர். 


சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவரது அலுவலகத்தில் பயனாளிகளை வரவழைத்து தனது தொகுதி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து அளித்தார், உடன் தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் தொகுதி செயலாளர் ராஜு, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளைச் செயலாளர்கள் காலப்பன் , செல்வம் ,பிரபாகரன், ராகேஷ், கழக சகோதரர்கள் பாஸ்கர், ரகுராமன் , மதி ,மோரிஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/