திருப்பத்தூர், ஜன 30 -
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம் பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியும் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் எல்லைக்குட்பட்ட பகுதியும் இணைந்து சுமார் 20க்கும் மேற்பட்ட செயற்கை மணல் தொட்டிகள் அமைத்து சட்ட விரோதமாக சமூக விரோத செயல்கள் ஈடுபட்டு வருவது குறித்து வருவாய்த் துறை மற்றும் காவல் துறை வசம் பல புகார் மனுக்களும் தொலைபேசி வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது எள்ளளவும் நடவடிக்கை இல்லை தனியார் சிப்காட் போல் அனைத்து மாவட்டங்களுக்கும் செயற்கை மணல் விநியோகிக்கப்பட்டு அரசாங்க வருவாய் பல கோடி வீணடிக்கப்பட்டு வருகிறது சில கோடி லஞ்சமாக பரிமாறப்படுகிறது மனசாட்சி உள்ள வருவாய் துறையை சேர்ந்த உயர் அதிகாரி காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரி பத்திரிக்கை நண்பர்களுடன் நேரடி கள ஆய்வுக்கு வர தயாரா இரண்டு துறைகளும் நாட்றம்பள்ளி பகுதியில் மணல் மாபியாக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது சுதந்திரம் கிடைக்க ஒன்றிணை வோம் வாருங்கள் கந்திலி ஒன்றிய பாஜக ஒன்றிய செயலாளர் பேட்டி அளித்துள்ளார்
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக