மதுரையில் இன்ஸ்டாகிராம் வீடியோவை வாட்ஸ் ஆப்ல் ஸ்டேட்டஸ் வைத்தால் சென்ட் இலவசம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஜனவரி, 2025

மதுரையில் இன்ஸ்டாகிராம் வீடியோவை வாட்ஸ் ஆப்ல் ஸ்டேட்டஸ் வைத்தால் சென்ட் இலவசம்.


மதுரையில் இன்ஸ்டாகிராம் வீடியோவை வாட்ஸ் ஆப்ல் ஸ்டேட்டஸ் வைத்தால் சென்ட் இலவசம்.



மதுரை காளவாசல் பைபாஸ் ரோடு வசந்தம் சூப்பர் மார்க்கெட் அருகே சென்டிஸ்ட் என்ற பெயரில் வாசனை திரவியம் கடை செயல்பட்டு வருகிறது இந்த கடையில் இன்றைய தினம் குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்டிஸ்ட் இன்டாகிராம் பக்கத்தில் நேற்றைய தினம் கடை நிர்வாகத்தினர் வீடியோ ஒன்றை வெளியிட்டனர் அந்த வீடியோவை வாட்ஸ் ஆப்ல் ஸ்டேட்டஸ் ஆக வைத்து எத்தனை நபர்கள் அந்த ஸ்டேட்டஸை 24 மணி நேரத்தில்  பார்வையிடுகிறார்களோ அத்தனை மில்லி கிராம் சென்ட் இலவசமாக இன்று கொடுத்து வருகின்றனர் ஆண்கள்  பெண்கள் என கூட்டம் அதிக அளவு இதில் காணப்பட்டது இதனால் கூட்டம் அதிக அளவு இருந்ததால் பைபாஸ் ரோடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது இதனால் கடை  நிறுவனத்தினர் கட்டுக்கடங்காத கூட்டம் வருவதைக் கண்ட கடை நிறுவனத்தினர் டோக்கன் மூலமாக வெவ்வேறு தேதிகளுக்கு சென்ட் பாட்டில்களை வாங்கி செல்ல டோக்கன்களை வழங்கினர் குடியரசு தினத்திற்கு சென்ட் இலவசமாக கொடுத்ததால் சற்று பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad