சிவகங்கை சண்முகராஜா கலையரங்கத்தில் மாவட்ட அளவிலான சிவகங்கை மாவட்ட அமெச்சூர் 20‌ஆம் ஆண்டுக்கான ஆணழகன் போட்டி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 மார்ச், 2025

சிவகங்கை சண்முகராஜா கலையரங்கத்தில் மாவட்ட அளவிலான சிவகங்கை மாவட்ட அமெச்சூர் 20‌ஆம் ஆண்டுக்கான ஆணழகன் போட்டி

 


சிவகங்கை சண்முகராஜா கலையரங்கத்தில் மாவட்ட அளவிலான சிவகங்கை மாவட்ட அமெச்சூர் 20‌ஆம் ஆண்டுக்கான ஆணழகன் போட்டி நடைபெற்றது.



சிவகங்கை மாவட்ட அமெச்சூர் 20ஆம் வருடத்திற்கான ஆணழகன் போட்டி சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் நடைபெற்றது. சிவகங்கை இந்தியன் ஆர்மி ஜிம் மற்றும் சிவகங்கை ஜேசிஐ இணைந்து நடத்தும் இப்போட்டியானது இந்தியன் ஆர்மி ஜிம் உரிமையாளர் திரு முத்துராஜா அவர்கள் தலைமையிலும் இந்தியன் ஆர்மி ஜிம் பொருளாளர் வெங்கி முன்னிலையிலும் நடைபெற்றது. இப்போட்டியில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஆணழகன்கள் பல்வேறு எடைப் பிரிவுகளில் பங்கேற்றனர். போட்டியில் சிறந்த ஆணழகன்களை நடுவர்கள் தேர்வு செய்தனர். மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்ற ஆணழகன்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். இந்நிகழ்வில் ஜிம் பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், நடுவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad