தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்த 689 நபர்களுக்கு பிடியாணை நிறைவேற்றம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 17 மார்ச், 2025

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்த 689 நபர்களுக்கு பிடியாணை நிறைவேற்றம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்த 689 நபர்களுக்கு பிடியாணை நிறைவேற்றம் - மாவட்ட காவல்துறை நடவடிக்கை.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் ஜாமீனில் வெளிவந்த எதிரிகள் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த காரணத்தினால் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்த வழக்குகளில் மாவட்ட காவல்துறையின் நடவடிக்கையால் இந்த ஆண்டு இதுவரை 689 எதிரிகளுக்கு பிடியாணை நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்கள் தொடர்ந்து ஆஜராகமலும், தலைமறைவாகவும் இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல்துறையால் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad