நெல்லையில் - கற்க கசடற STUDENTS LED CONFERENCE – 2025. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 நவம்பர், 2025

நெல்லையில் - கற்க கசடற STUDENTS LED CONFERENCE – 2025.

நெல்லையில் - கற்க கசடற STUDENTS LED CONFERENCE – 2025

பாளையங்கோட்டை ஒயாசிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 'கற்க கசடற ' Learning Unlimited Students LED Conference -நிகழ்ச்சி 2025 பள்ளி வளாக மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பள்ளி இயக்குநர் டாக்டர்.வசந்தா ரூபி ஜேம்ஸ், பள்ளித் தாளாளர் டாக்டர்.ஜான்சன் ராஜா ஜேம்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக Deputy Superintendent of Police இரகுபதி ராஜா, மற்றும் விளையாட்டு நட்சத்திர விருந்தினர் எட்வினா ஜேசன் - ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.

இதில் மாணவர்களின் செயல்திறன் வெளிப்பாடு, புத்தக கண்காட்சி, உணவுத் திருவிழா மற்றும் பெற்றோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

பாளையங்கோட்டை அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் ஜான்சன் பல் மருத்துவமனை இணைந்து இலவச கண் மற்றும் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவினை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆலோசகர் ஜோசப், பள்ளி துணை முதல்வர் செல்வி மற்றும் பள்ளி உடற்கல்வி இயக்குநர் பெரியதுரை ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad