திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதுவிலக்கு உதவி ஆய்வாளர் லோகநாதன் தலைமையில், தலைமை காவலர்கள் பாலகிருஷ்ணன், ஞான வெங்கடேஷ் உள்ளிட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தாராபுரம்–பொள்ளாச்சி சாலையில் உள்ள அருண் பேக்கரி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பல்லடத்தில் குடியிருந்து வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த அஜய் சஹானி (வயது 37), தந்தை லால் சஹானி என்பதும் தெரியவந்தது.
அவரிடம் நடத்திய சோதனையில் சுமார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அஜய் சஹானி மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக