ஆழ்வார்திருநகரி குண்டும் குழியுமான நெடுஞ்சாலை - வாகன அதிர்வால் வீடுகளில் விரிசல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 நவம்பர், 2025

ஆழ்வார்திருநகரி குண்டும் குழியுமான நெடுஞ்சாலை - வாகன அதிர்வால் வீடுகளில் விரிசல்.

ஆழ்வார்திருநகரி குண்டும் குழியுமான நெடுஞ்சாலை - வாகன அதிர்வால் வீடுகளில் விரிசல்.

தூத்துக்குடி மாவட்டம், நவ.24. கடந்த சில நாட்களாக தென் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆழ்வார் திருநகரி பகுதி நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் சாலையானது குண்டும், குழியுமான நிலையில் உள்ளது.

அவ்வழியே செல்லும் கனரக வானங்களினால் ஏற்படும் அதிர்வுகளால், சாலையை ஒட்டி அமைந்து உள்ள வீடுகளிலும், கட்டிடங்களிலும் விரிசல்கள் ஏற்பட்டு அபாய நிலையில் உள்ளது.
குறிப்பாக இரவு நேரங்களில் கனரக வாகன போக்குவரத்து சற்று அதிகமாக உள்ள நிலையில், கட்டிடங்களில் உள்ள காரை பூச்சு விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. 

எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உடனடியாக சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை சீரமைத்து தர வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad