தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டியில் மண் சுவரால் ஆன குடிசை இடிந்து விழுந்து, மாநகராட்சி விளம்பர பலகை சேதமடைந்தது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 நவம்பர், 2025

தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டியில் மண் சுவரால் ஆன குடிசை இடிந்து விழுந்து, மாநகராட்சி விளம்பர பலகை சேதமடைந்தது.

நவம்பர் 24, தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில், அத்திமரப்பட்டியில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே, பிச்சை மரைக்காயர் என்ற நபருக்குச் சொந்தமான மண் சுவரால் ஆன குடிசை நேற்று பெய்த கனமழையில் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. அதன் ஒரு பகுதி அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் விழுந்ததால், மாநகராட்சியால் அங்கு வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகை விழுந்து சேதமடைந்தது.


மேலும் வீட்டின் ஆபத்தான நிலையை உணர்ந்து வீட்டுப் பொருட்கள் முன்கூட்டியே அகற்றப்பட்டதாலும், வீடு இடிந்து விழுந்தபோது உள்ளே யாரும் வசிக்காததாலும் வேறு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும், இரவு நேரமாகிவிட்டதால், அதிர்ஷ்டவசமாக அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் யாரும் இல்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தப்பட்டது.


தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad