குடியாத்தத்தில் அரசால் தடை செய்யப் பட்ட போதைப்பொருள் வைத்திருந்ததாக 2 வாலிபர்கள் கைது போலீசார் விசாரணை!
குடியாத்தம் , நவ.21 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த .
உள்ளி. கூட்ரோடு பகுதியில் . பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜூராஜன் கிராமிய காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்களை பிடித்து சந்தேகத்தின் பெயரில் விசாரணை மேற்கொண்டனர் அவர்கள் முன்னுக்கு புறனாக பதில் அளித்ததால் இரு நபர் களை சோதனை . செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட (மெத்தமைடன்) 3 கிராம் சுமார் 6000 மதிப்புள்ள போதைப் பொருள் வைத்திருந்தார்கள் குடியாத்தம் மொதீன் பேட்டையை சேர்ந்த ஆசிம்.த/பெ. ஜமால் (வயது 27) தாரா படவேட்டை சேர்ந்த. முபாரக் த/பெ. சதால். (வயது 29) ஆகியோரை கைது செய்து அவர்களிடமி ருந்த மூணு கிராம் போதைப்பொருள் செல்போன் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் அப்போது உடன் இருந்த கிராம காவல் உதவி ஆய்வாளர் ராஜூ தனிப் பிரிவு உதவி ஆய்வாளர் முருகன் காவலர் ராமு மற்றும் காவலர்கள் உடனிருந்தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக