தாராபுரம் அருகே டாட்டா ஏஸ் வாகனம் சலூன் கடைக்குள் புகுந்து நடந்த விபத்தில் ஒருவர் படுகாயம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 நவம்பர், 2025

தாராபுரம் அருகே டாட்டா ஏஸ் வாகனம் சலூன் கடைக்குள் புகுந்து நடந்த விபத்தில் ஒருவர் படுகாயம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை!


திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:

தாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உடுமலை சாலை சந்திப்பு சிக்னல் அருகே இன்று காலை ஏற்பட்ட வாகன விபத்தில் ஒரு முதியவர் காயமடைந்தார்.


இன்று ஈரோடு மாவட்டம் குமரகுரு வேளாண்மை கல்லூரியின் பேருந்து மாணவ–மாணவிகளை ஒட்டன்சத்திரம் சந்தை ஆய்வுக்காக அழைத்துச் செல்லும் பொருட்டு தாராபுரம் – ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலை உடுமலை ரவுண்டானா சிக்னல் அருகே நின்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பேருந்தின் முன்னிலையில் நின்றிருந்த சிறு சரக்கு வாகனம் (டாடா ஏஸ்ஸ்) மீது பின்புறத்தில் இருந்த கல்லூரி பேருந்து மோதியதாக கூறப்படுகிறது.


இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த சிறு சரக்கு வாகனம் அருகிலிருந்த ஹைலைட்ஸ் சலூன் கடைக்குள் புகுந்தது. இதில் கடையில் முடி திருத்தத்திற்காக வந்திருந்த தாராபுரம் சர்ச்சு சாலையை சேர்ந்த.அமிர்தலிங்கம், மகன் சந்திரன் (68),

திடீர் விபத்தில் சிக்கி மேல்புற உதட்டில் மற்றும் பின்தலையில் காயமடைந்தார். அவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வருகிறார்.


இந்த விபத்தில் சலூன் கடையின் முன்புற கண்ணாடி முழுவதும் சேதமடைந்தது.


சிறு சரக்கு வாகனத்தை ராஜேஷ் என்பவர் ஓட்டிச் சென்றதாகவும், கல்லூரி பேருந்தை தாமரைசெல்வன் (38), ஈரோடு மாவட்டம் பவானி, என்பவர் இயக்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


இந்த நிலையில் டாட்டா ஏஸ் வாகனம் ஓட்டி வந்த தாமரைசெல்வன் மீது பொதுமக்கள் மற்றும் கடைய ஊழியர்கள் தாக்கியதால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இந்த நிலையில் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தாராபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad