குடியாத்தத்தில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது-
குடியாத்தம் , டிச 7 -
குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை!
வேலூர் மாவட்டம் குடியாத்தம், அணைக் கட்டு அடுத்த ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த மரத்தச்சு தொழிலாளி வெங்க டேசன் (வயது 58) என்பவர் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியில் உள்ள மரதச்சு வேலை செய்துவரும் தனது நண்பரின் வீட்டிலிருந்து மரத்தச்சு வேலை செய்து வந்தார் இதனிடையே வெங்கடேசனின் சக தொழிலாளியின் பத்து வயது சிறுமிக்கு வெங்கடேசன் பாலியல் சீண்டல் கொடுத்ததாக கூறப்படுகிறது இதனையடுத்து அந்த (10 வயது) சிறுமி தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார் இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினர் மரத்தச்சு தொழிலாளி வெங்கடேசன் (வயது 58) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து . சிறையில் அடைத்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக