ஏரல் - பாபர் மசூதி இடிப்பு தினம் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 7 டிசம்பர், 2025

ஏரல் - பாபர் மசூதி இடிப்பு தினம் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஏரல் - பாபர் மசூதி இடிப்பு  தினம் கண்டன ஆர்ப்பாட்டம்.

பாப்ரி மசூதியில் ஒரு நாள் பாங்கொலி கேட்கும் என கோஷம் எழுப்பி ஏரல் காந்தி சிலை முன்பு எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக பாபர் மசூதி இடிப்பு தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பாபர் மசூதி தகர்ப்பு இடிப்பு தினம் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நிகழ்ச்சியில் மத்திய அரசுக்கு எதிராக பாப்ரி 'மசூதியில் ஒரு நாள் பாங்கொலி கேட்கும்' உள்ளிட்ட கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எஸ்டிபிஐ மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் காதர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ மாநில வர்த்தக அணி மாநில துணைத்தலைவர் கிண்டி அன்சாரி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். 

நிகழ்ச்சியில் முஸ்லிம் வணிகர் சங்கம் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad