வீடு கட்டுவதற்காக நிலத்தை தோண்டும் போது மல்ல பள்ளி அருகே அரை அடி முருகன் சிலை கண்டுபிடிப்பு !
திருப்பத்தூர் , டிச 7 -
திருப்பத்தூர் மாவட்டம் மல்ல பள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அன்சாகரம் கிராமம் பாறை வட்டம் பகுதியில் திருப்பதி என்பவர் நிலத்தில் வீடு கட்டுவதற்காக நிலத்தை ஜேசிபி கொண்டு தோண்டும் பொழுது திடீரென ஏதோ ஒரு சிலை தெரிவது போல் திருப்பதி மற்றும் ஜோலார்பேட்டை ஒன்றிய பாமக தலைவர் சிவசங்கர் ஆகியோர் பார்த்துள்ளனர் அப்பொழுது அரை அடி உயரம் கொண்ட வெண்கலத் தில் ஆன முருகர் சிலை இருப்பதை அறிந்த இவர்கள் உடனடியாக சம்பந்தப் பட்ட தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்,
பின்னர் அங்கு வந்த தொழில் துறை ஆய்வாளர்கள் அதனை ஆய்வுக்காக திருப்பத்தூர் தொல்லியல் துறை வளாகத்திற்கு எடுத்துச் சென்றனர் இதனை கண்ட பகுதி மக்கள் அந்த முருகர் சிலைக்கு கற்பூரம் ஏற்றி ஊது வத்தி காட்டி வணங்கினர், இந்த சம்பவம் அப்பகுதியில் மேலும் பழமையான சிலைகள் காணப்படும் என யூகிக்க முடிகிறது மேலும் அப்பகுதியில் தொல் லியல் துறை சார்பில் ஆய்வுகள் நடத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக