குடியாத்தம் அருகே ஊருக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி! சாலை மறியல் அரசு அதிகாரிகள் சமரசம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 17 டிசம்பர், 2025

குடியாத்தம் அருகே ஊருக்குள் புகுந்த மழை நீரால் பொதுமக்கள் அவதி! சாலை மறியல் அரசு அதிகாரிகள் சமரசம் !

குடியாத்தம் அருகே ஊருக்குள் புகுந்த மழை நீரால்  பொதுமக்கள் அவதி! சாலை மறியல் அரசு அதிகாரிகள் சமரசம் !
குடியாத்தம் , டிச 17 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் போடி பேட்டை பகுதியில் உள்ள சிவூர் ஊராட்சி லட்சுமி கார்டன் பகுதியில் கடந்த .3. மாத காலமாக மோர்தனா டேம் கால்வாயில் இருந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்து கடந்த மூன்று மாத காலமாக தேங்கி இருப்பதால் பாசி படிந்துள்ளது. இதனால். அப்பகுதி பொதுமக்களுக்கு பெரிதும். இடையூறாக உள்ளது. மேலும் சாலையில் பாசி படிந்து இருப்பதால் பொதுமக்கள் செல்லும்போது வழுக்கி விழுந்து விடுகிறார்கள் இது சம்பந்தமாக பலமுறை . மாவட்ட ஆட்சித் தலைவர் நகராட்சி‌ மற்றும்  வட்டார வளர்ச்சி அலுவலர் போன்ற அலுவலர்களில் மனு கொடுத்தும் இன்று வரை தேங்கி உள்ள தண்ணீரை. அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை இதன் காரணமாக இன்று மாலை அப்பகுதி பொதுமக்கள்.  சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் . திடீர் சாலை மறியலில்.ஈடுபட்டனர் தக வல் அறிந்தவுடன் குடியாத்தம் வட்டாட்சி யர் கே பழனி. நகர காவல் ஆய்வாளர் ருக்மாங்தன் வட்டார வளர்ச்சி அலுவலர் கள் ஹேமலதா  சத்தியமூர்த்தி ‌ஆகியோர் பேச்சுவார்த்தை. நடத்தி. உரிய நடவடிக் கை எடுக்கப்படும் எனஉறுதிஅளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்ற னர் இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதித்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது

செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad