சைபர் கிரைம் காவல் நிலையம் நடவடிக் கை டிஜிட்டல் அரெஸ்ட்" மோசடி: 542 சிம் கார்டுகளைப் பயன்படுத்தி கைவரிசை - 5 பேரை அதிரடியாகக் கைது ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

சைபர் கிரைம் காவல் நிலையம் நடவடிக் கை டிஜிட்டல் அரெஸ்ட்" மோசடி: 542 சிம் கார்டுகளைப் பயன்படுத்தி கைவரிசை - 5 பேரை அதிரடியாகக் கைது !

 சைபர் கிரைம் காவல் நிலையம் நடவடிக் கை டிஜிட்டல் அரெஸ்ட்" மோசடி: 542 சிம் கார்டுகளைப் பயன்படுத்தி கைவரிசை - 5 பேரை அதிரடியாகக் கைது !
ராணிப்பேட்டை , பிப் 24 -
ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்டத்தில் "டிஜிட்டல் அரெஸ்ட்" (Digital Arrest) முறையில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலை, மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளனர். வழக்கின் பின்னணி:மத்திய அரசு அதிகாரிகள் அல்லது சிபிஐ (CBI) அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து, வாட்ஸ்அப் மூலம் வீடியோ காலில் தொடர்பு கொண்டு பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் "டிஜிட்டல் அரெஸ்ட்" மோசடி குறித்து ராணிப்பேட்டை சைபர் கிரைம் பிரிவில் (குற்ற எண். 16/2025) வழக்கு கடந்த டிசம்பர் மாதம் பதிவு செய்யப்பட்டது.
போலீசாரின் அதிரடி விசாரணை:
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் மேற்பார்வையில்  அரக்கோணம் துணை காவல் கண் காணிப்பாளர் தலைமையில் அரக்கோ ணம் தாலுகா காவல் ஆய்வாளர், அரக் கோணம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர், சைபர் கிரைம் உதவி ஆய்வாளர், அரக் கோணம் சிறப்பு புலனாய்வு குழு சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர் தலைமை யில் ஐந்து சிறப்பு குழுக்கள் உருவாக்கப் பட்டு, தேடப்படும் எதிரிகளின் வங்கி கணக்குகள் செல்போன் பதிவுகள் மற்றும் புலன் விசாரணைக்கு பயன்படுத் தப்படும் பிரத்தியேக மென்பொருள் ஆகியவற்றின் உதவியோடு சிறப்பான புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது
இதில் கண்டறியப்பட்ட முக்கியத் தகவல் கள்: சிம் கார்டு மோசடி: குற்றவாளிகள் பயன்படுத்திய  எண்களை ஆய்வு செய்த தில், கடந்த ஓராண்டில் மட்டும் அந்த எண் களைப் பயன்படுத்தி 542 சிம் கார்டுகள்  மாற்றப்பட்டு பல்வேறு நபர்களை மிரட்டி இலட்சக்கணக்கான பணம் பறித்த உண்மை தெரியவந்தது. இதில் பெரும் பாலும் ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள், தனிமையில் உள்ள முதியவர்கள், தனி யார் நிறுவன மேலாளர்கள் என  பல் வேறு நபர்கள் பதிக்கப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை இவர்களுடைய தொ லைபேசி எண்ணை தொடர்ந்து கண் காணித்ததில் சிம் கார்டு வாங்கு வதற்காக தமிழகம் வந்திருப்பது தெரிய வந்தது அவர்களைப் பின்தொடர்ந்து கைது செய்யப்பட்டது. தற்போதைய நிலை:கைது செய்யப்பட்ட 5 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த மோசடியில் தொடர்புடைய மற்ற கூட்டா ளிகள், இவர்களது நிதிப் பரிவர்த்தனை கள் மற்றும் பிற மாநிலங்களில் இவர்கள் செய்துள்ள குற்றங்கள் குறித்து போலீ சார் தற்போது போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை:
"டிஜிட்டல் அரெஸ்ட்" என்ற பெயரில் எந்த ஒரு அரசு அதிகாரியும் வாட்ஸ்அப் மூலம் உங்களை விசாரணை செய்ய மாட்டார் கள். அடையாளம் தெரியாத நபர்களிடம் உங்கள் வங்கித் தகவல்களையோ அல்லது தனிப்பட்ட விவரங்களையோ பகிர வேண்டாம். சைபர் மோசடியில் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணையோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத் தையோ தொடர்பு கொள்ளவும்.

  மாவட்ட  செய்தியாளர் ஆர்ஜே சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad