அடகு கடை நடத்தி 75 பேரிடம் சுமார் 300 பவுன் வரை ஏமாற்றிய நபர் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 மார்ச், 2026

அடகு கடை நடத்தி 75 பேரிடம் சுமார் 300 பவுன் வரை ஏமாற்றிய நபர் கைது.

அடகு கடை நடத்தி 75 பேரிடம் சுமார் 300 பவுன் வரை ஏமாற்றிய நபர் கைது. 

 SAN என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி பல நபர்களிடம் நகையை திருப்பி தராமல் ஏமாற்றியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுக்களை அளித்திருந்தனர். 

புகார் மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளியை  கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

உத்தரவின்படி குளச்சல் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர். ரேகா R. நங்லட்  மேற்பார்வையில் கருங்கல் காவல் ஆய்வாளர் விமலன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

கருங்கல் காவல் நிலையத்தில் 316(2), 318(4) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் குற்றவாளி முள்ளங்கினா விளையை சார்ந்த சைலஸ் என்பவர் மகன் அகில் S விகானோ வயது 27 என்பவரை கருங்கல் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி  சிறையில் அடைத்தனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad