காட்பாடி காந்திநகர் துளிர் பள்ளியில் 23 ஆம் ஆண்டு மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு விழா 2025-26 ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 5 ஏப்ரல், 2026

காட்பாடி காந்திநகர் துளிர் பள்ளியில் 23 ஆம் ஆண்டு மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு விழா 2025-26 !

காட்பாடி காந்திநகர் துளிர் பள்ளியில் 23 ஆம் ஆண்டு மழலையர் பள்ளியில்  பட்டமளிப்பு விழா 2025-26 
காட்பாடி , ஏப்ரல் -5
 வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் காந்தி நகரில் அமைந்துள்ள துளிர் அறிவியல் ஆய்வு பள்ளியில் 23ஆம் ஆண்டு மழலை யர் பட்டமளிப்பு விழா இன்று பள்ளி வளா கத்தில் நீங்களும் நாங்களும் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நடைபெற்றது. மழலையர் பட்டமளிப்பு விழாவிற்கு பள்ளியின் தாளாளர் முனைவர் செ.நா.ஜனார்த்த னன் தலைமை தாங்கி மழலையர் பட்டங் களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது..  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வழிகாட்டுதலுடன் நடை பெறும் இப் பள்ளியானது கற்பது கற்கண்டே என்ற சிந்தனையுடம் மாணவ மாணவிகள் புரிந்து கொண்டு கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தின் கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.  இன்று இப்பள்ளியில் பயின்று உயர் கல்விக்காக செல்லும் மாணவர்கள் புரிந்து கொண்டு படித்து மேலும் வளர வேண்டும் என்றார்.
முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரி யர் த.கனகா வரவேற்றுப் பேசினார். பள்ளியின் அறங்காவலர் வி.பழனி,  நீங்களும் நாங்களும் அறக்கட்டளையின் மேலாளர் நிலா பாரதி ஆகியோர் முன்னி லை வகித்தனர்.  பள்ளியில் பயிற்சி பெற்ற இருபத்தைந்து மாணவ மாணவி களுக்கு மழலையர் பட்டம் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
  பள்ளியின் ஆசிரியர்கள் செ.சித்ரா,  வெ.பாரதி, சு.மலர்கொடி தன்னார்வ தொண்டர்கள் பி.கார்த்திகேயன், ஜே.எபினேசர் பால்,  சரவணதேவ், கே.பிரகாஷ்,  முகேஷ்,  என்.பிரியா, ஜெயமுருகன், ரபிகா, தனுஷ், கேத்தரின் ஆகியோர் பங்கேற்றனர். 5ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகள் ரக்‌ஷிதா, தீபாஸ்ரீ, கே.யுவஸ்ரீ, டி.யுவஸ்ரீ, செரியா மெர்லினா, ஸ்ரீதனிஷ், கோவர்தன், சுகவாணன், ரோஷன் ஆகியோரின் கலைநிகழ்சிகள் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad