குடியாத்தத்தில் குடி போதையில் தகராறு சென்ட்ரிங் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 மே, 2026

குடியாத்தத்தில் குடி போதையில் தகராறு சென்ட்ரிங் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை !

குடியாத்தத்தில்  குடி போதையில் தகராறு சென்ட்ரிங் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொலை !
குடியாத்தம் ,மே 13 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கோபாலபுரம்பகுதியை சேர்ந்தவர் காமராஜ் மகன் முகேஷ் (வயது 18) திருப்பத்தூரை சேர்ந்த இவர் தற்போது குடியாத்தம் பகுதியில் வசித்து வருகிறார்
கஸ்பா பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 28) ( எ ), வசி ‌இருவரும் கட்டிட சன்டிரிங்க வேலை செய்து வந்தனர் , இவர்கள் இருவரும் நண்பர்கள்  இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் குடியாத்தம் அஞ்சுமன் ரோடு பகுதியில் ஒன்றாக மது அருந்தி உள்ளனர்
அப்பொழுது இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு உள்ளது , அதில் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கிக் கொண்டனர் , இதில் ஆத்திரம் அடைந்த விஷ்ணு அருகில் இருந்த கட்டையை எடுத்து முகேஷ் தலையில் பலமாக அடித்துள்ளார் , இதில் அவருக்கு பலத்த காயத் ஏற்பட்டு உடனடியாக அவரை மீட்டு  குடியாத்தம் பஸ் நிலையம் அருகில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து சிகிச்சை பெற்று வந்தார், மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் இந் நிலையில் காலை சிகிச்சை பலனில் பரிதாபமாக உயிரிழந் தார் , இதுகுறித்து குடியாத்தம் . நகர போலீசார் வழக்குப்பதிவு விஷ்ணுவை கைது செய்துள்ளனர் , மேலும் இறந்த முகேஷ் உறவினர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் போலீஸ் நிலைய வளாகத்தில் குவிந்த தால் பரபரப்பாக காணப்பட்டது , மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கஸ்பா பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad