திருவண்ணாமலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 9 ஜூன், 2026

திருவண்ணாமலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் ஆய்வு!
திருவண்ணாமலை, ஜுன் 9 -
திருவண்ணாமலை மாவட்டம் மாநகராட் சிக்குட்பட்ட நகராட்சி தொடக்கப்பள்ளி யில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதைமாவட்ட ஆட்சித்தலைவர்  வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது மாணவர் களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்த ஆட்சித்தலைவர், உணவை அவரே நேரில் உண்டு அதன் தரத்தினை உறுதிப்படுத்தினார். மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறையான ஊட்டச்சத்துடனும் சுகாதார மான முறையிலும் தயாரிக்கப்படுகிறதா என்பதை சமையல் கூடத்திற்குச் சென்று பார்வையிட்டார்.குழந்தைகளுக்குத் தாமதமின்றி, குறித்த நேரத்தில் சுடச்சுட உணவு வழங்கப்பட வேண்டும் என்றும், தூய்மையைப் பராமரிப்பதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்

திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் கலையரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad