திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க், அவர்கள் தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 2026-2027-ம் ஆண்டிற்கான 'வெற்றி வீடு திட்டத்தினை' சிறப்பாகவும், விரைவாகவும் செயல்படுத்துவது தொடர்பான மாவட்ட அளவிலான செயலாக்கப் பயிற்சி நடைபெற்றது.
ஊரகப் பகுதிகளில் வசிக்கும் தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்களை விரைவாகவும், எவ்விதத் தாமதமுமின்றி கொண்டு சேர்ப்பதை குறிக்கோளாக கொண்டு இக்கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு திட்டத்தின் நோக்கங்கள் குறித்தும், அதனைத் தரம் குறையாமல் நிறைவேற்றுவது குறித்தும் விரிவாக விவாதித்தனர்.
திட்டப் பணிகளைத் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் முடிப்பது குறித்தும், பயனாளிகளின் பட்டியலைத் தன்மையுடன் தயாரிப்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அதிகாரிகளுக்குத் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கினார்.
இந்தத் திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற எளிய மக்களின் நீண்ட நாள் கனவான நல்வாழ்வு மற்றும் வீட்டு வசதி தேவைகள் மேலும் சிறப்பாக நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோ.பாபு
திருவண்ணாமலை
மாவட்ட செய்தியாளர்
9843780102
வி.ஜெகன்
திருவண்ணாமலை மாவட்டம் ஒளிப்பதிவாளர்
9894381487
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக