திருநெல்வேலி டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு நோய் தினம் மனிதச் சங்கிலி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 14 நவம்பர், 2026

திருநெல்வேலி டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு நோய் தினம் மனிதச் சங்கிலி

நீரிழிவு நோயால் ஏற்படும் பார்வையிழப்பைத் தடுக்க திருநெல்வேலி டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் உலக நீரிழிவு நோய் தினம் 2026 மனிதச் சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

திருநெல்வேலி | 14 நவம்பர் 2026
உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் கண் மருத்துவக் கல்வி நிறுவனம் சார்பில், நீரிழிவு நோய் மற்றும் அதனால் ஏற்படும் கண் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மனிதச் சங்கிலி நிகழ்ச்சி மருத்துவமனை முன்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி டாக்டர் அகர்வால் ஆப்டோமெட்டிரி கல்லூரி, சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி பாளையங்கோட்டை, திருநெல்வேலி இதய ஜோதி நர்சிங் கல்லூரி மாணவ மாணவியர்கள் கல்லூரி மாணவிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளர்கள் கலந்துகொள்கின்றனர். 

இந்நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் பேராசிரியர் டாக்டர் D. லயனல் ராஜ் தலைமை தாங்ககி தொடங்கி வைத்து நீரழிவு நோயினால் கண்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக பேசினார்.

நீரிழிவு நோயினால் விழித்திரையின் நுண்ணிய இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic Retinopathy) எனப்படுகிறது. 

இந்நோய் ஆரம்ப நிலையில் எந்தவிதமான அறிகுறிகளும் இல்லாமல் ஏற்படக்கூடும். உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கடுமையான பார்வைக் குறைபாடு மற்றும் பார்வையிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து பேராசிரியர் டாக்டர் டி. லயனல் ராஜ் கூறியதாவது:

"இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது ஒரு முக்கியமான பொது சுகாதாரச் சவாலாகும்.நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்களில் எந்தவிதமான வலியோ, பார்வைக் குறைபாடோ இல்லாத நிலையிலும் விழித்திரையில் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, நீரிழிவு நோயாளிகள் பார்வை நன்றாக இருக்கிறது என்பதற்காக கண் பரிசோதனையைத் தவிர்க்கக் கூடாது.


குறிப்பாக, இரண்டாம் வகை நீரிழிவு நோய் கண்டறியப்பட்ட உடனேயே விரிவான விழித்திரைப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர் கண் மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.


இன்றைய நவீன மருத்துவத்தில் விழித்திரை லேசர் சிகிச்சை, கண்ணுக்குள் செலுத்தப்படும் மருந்துகள் மற்றும் விழித்திரை அறுவைச் சிகிச்சைகள் மூலம் பல்வேறு பாதிப்புகளுக்குச் சிறப்பான சிகிச்சை அளிக்க முடியும். இருப்பினும், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதே பார்வையைப் பாதுகாப்பதற்கான மிக முக்கியமான வழியாகும்.

நீரிழிவு நோய் இருப்பதால் கட்டாயம் பார்வையிழப்பு ஏற்படும் என்பதில்லை. முறையான பரிசோதனையும் உரிய நேரத்தில் சிகிச்சையும் பார்வையைப் பாதுகாக்க உதவும்."


மேலும், இம்மனிதச் சங்கிலியில் பங்கேற்ற

கல்லூரி மாணவிகள் தங்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே நீரிழிவு நோய் மற்றும் கண் பரிசோதனையின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பைக் குறைப்பதற்காக, பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கண் பரிசோதனைகள் மற்றும் நவீன கண் மருத்துவச் சேவைகள் மூலம் தொடர்ந்து பணியாற்றி வருவதாக டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

"இரத்தச் சர்க்கரையைப் பரிசோதிப்போம்! விழித்திரையைப் பாதுகாப்போம்! பார்வையிழப்பைத் தடுப்போம்!"

நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருத்துவ இயக்குனர், கண் விழித்திரை பிரிவ Dr. பிருந்தா ,மருத்துவர்கள் ,மற்றும் ஊழியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad